• Dec 25 2024

பாக்கியலட்சுமி தொடரை விட்டு விலகும் கோபி -நடிகர் சதீஷின் பதிவால் ரசிகர்கள் அதிருப்தி...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சதீஷ். இவருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவ் ஆக இருக்கும் நபர். `பாக்கியலட்சுமி' தொடரில் இருந்து விலகப் போவதாக சமூகவலைதளப் பக்கங்களில் சதீஷ் அறிவித்திருந்தார். 


அந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவர் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து விலகினால் வேறொருவர் நிச்சயம் அந்தக் கேரக்டருக்கு செட் ஆக மாட்டார் என பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் தொடரில் நடிக்கப் போவதாக அவரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் சதீஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்.


அதில், `பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அறை வாங்கிக் கொள்ளலாம்' என்கிற கேப்ஷனுடன் அவரது புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்திற்கு கீழே,  `பாக்கியலட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் நெருங்கிவிட்டது' எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ப்தியடைந்து உள்ளனர். 

Advertisement

Advertisement