• Dec 26 2024

ஈஸ்வரி ரெஸ்டாரெண்ட் பங்ஷனில் ஜெயித்தது கோபியா? பாக்கியாவா? ஆனாலும் செழியன் ஹாப்பி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் நிகழ்விற்கு ஜெனியும் குழந்தையும் வந்த நிலையில், குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார்கள். எழில் செழியனுக்கு குழந்தையை கொண்டு போய் கொடுக்க, அவர் கண்ணீரோடு கொஞ்சுகிறார்.


இதையடுத்து ஈஸ்வரி, ராமமூர்த்தி அங்கு வர, அவங்களுக்கு குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார்கள். ஈஸ்வரி முதலில் ஜெனியுடன் கோவப்படுகிறார். பின்பு குழந்தையை தூக்கி வைத்துக் கொள்கிறார்.

எல்லாரும் தயாராகி வாசலில் மினிஸ்டருக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் மினிஸ்டரை காணவில்லை இன்னும் எவ்வளவு நேரம் என குழம்பத் தொடங்குகிறார்கள்.இவற்றை எல்லாம் வெளியில் இருந்து பார்த்து ரசிக்கிறார் கோபி. பாக்கியா மினிஸ்டருக்கு வாய்ஸ் போடுகிறார்.

இதை தொடர்ந்து இன்னும் நேரமாக பாக்கியா மினிஸ்டர் ஆபிஸ்க்கு போன் செய்கிறார். அங்கு மினிஸ்டர் அங்கு தான் வர இருந்தாங்க, ஆனா ப்ரோக்ராம் மாறி அவங்க ஸ்கூல் பங்சனுக்கு போயிட்டாங்க என சொல்கிறார்கள். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். கோபி சந்தோசப் படுகிறார்.

Advertisement

Advertisement