• Dec 26 2024

விஜய் டிவியில் மீண்டும் ஹீரோவாகும் ஈரமான ரோஜாவே நாயகன்! புதிய சீரியல்.. புதிய நாயகி..?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புது முகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட சீரியல்களில்  ஒன்று தான் ஈரமான ரோஜாவே. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலில், திரவியம் மற்றும் பவித்ரா முக்கிய நடிகர்களாக நடித்துள்ளார்கள்.

இந்த ஈரமான ரோஜாவே சீரியல் மக்களின் வரவேற்பை பெற்று  சுமார் 807 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது.

ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் பெரிய வெற்றியடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் புதிய கதைக்களம், வேறு இயக்குனர், புதிய நடிகர்களுடன் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.


இந்த சீரியல் ஆரம்பத்தில் நல்ல விறுவிறுப்பாக சென்றாலும் இடையில் இயக்குநரின் இறப்பு, புதிய இயக்குநர் என மாற்றங்கள் நடைபெற கதையும் சற்று சொதப்பியது. இதன் காரணமாக ஈரமான ரோஜாவின் இரண்டாம் பாகம் 502 எபிசோடுகளுடன்  முடிவுக்கு வந்தது.


அதன்படி ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் திரவியம். இந்த தொடர் இவருக்கு நல்ல ரீச்சைப் பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் கமிட் ஆகியுள்ளார் திரவியம்.

அதாவது குலோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் புதிய சீரியலில் திரவியம் நாயனாக நடிக்க உள்ளார். இந்த தொடரின் நாயகியாக ஸ்ரீதிகா நடிக்க உள்ளாராம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement