• Dec 26 2024

பாக்கியாவிடம் இருந்து இனியாவை பிரிக்க கோபி போட்ட திட்டம்!வறுத்தெடுத்த ராதிகா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  இனியாவுக்கு பாக்கியா அட்வைஸ் பண்ணி தூங்க வைக்க, இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன் என சொல்லி மன்னிப்பு கேட்டு தூங்குகிறார் இனியா.

இன்னொரு பக்கம் ராதிகாவும் மையூவும் காலையில் காபி குடித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த கோபி இனியா விஷயத்தை பற்றி பேச, ஏன் இத்தனை நாள் என் கூட பேசாமல் இருந்தீங்க என ராதிகா திட்டுகிறார். மேலும் உங்கள் வீட்டில் என்ன நடக்குதோ அதை வைத்து தான் என் கூட பேசுறதா இல்லையா என்று முடிவெடுக்கிறீர்களா? இத்தனை நாள் அம்மாவுக்காக கதைக்காம  இருந்தீங்க, இப்போ இனியாவுக்காக கதைக்கிறீங்களா என சரமாரியாக திட்டுகிறார்.

இதை தொடர்ந்து இனியா, ஈஸ்வரி இடமும் மன்னிப்பு கேட்க, அவர் சரி இனி கவனமாக இருந்து கொள்  என சொல்லுகின்றார். ராமமூர்த்தியும் இனியாவுக்கு இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள் என சாதுவாக அட்வைஸ் பண்ணுகிறார்.


அந்த நேரத்தில் கோபி அங்கு வந்து இனியாவிடம் பேசி விட்டு, நேற்று வீட்டுக்கு வந்தேன் செழியன் தான் நடந்ததை சொன்னான்  என அவரையும் போட்டுக் கொடுத்து, நேராக பாக்கியாவிடம் சென்று உனக்கு பிள்ளைய ஒழுங்கா வளர்க்க தெரியலையா என கண்டபடி திட்டுகிறார்.

இறுதியாக பாக்கியா எங்க வீட்டுப் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் வெளியே போங்க என்று சொல்லவும், ஈஸ்வரியும் அவரை வெளியே போகுமாறு  திட்டுகிறார். ஆனால் கோபி நீ இத்தனை நாள் இனியாவை பார்த்து கிட்டது போதும் நான் இனி பார்த்துக் கொள்கிறேன் என எல்லாருக்கும் ஷாக் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement