• Dec 25 2024

என் இரும்புப் பெண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அமீரின் சிலிர்க்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5இல் கலந்து கொண்டவர்களே அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகத் தொடங்கி விட்டனர். 

இந்த நிலையில், இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடும் பவானிக்கு அவரது காதலனான அமீர் வாழ்த்துச் செய்தி ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அபி மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியது. அதன் பின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னால் அந்நிகழ்ச்சி முழுவதும் சுற்றினார். இந்த சீசனில் பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாவனி மற்றும் அமீருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்த காரணத்தால் இவர்கள் இருவரும் பின்பு பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டிலையும் வென்றனர்.

அத்தோடு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பல முறை தனது காதலை சொன்ன போதும் ஏற்றுக்கொள்ளாத பாவனி ஒரு கட்டத்தில், ஐ லவ் யூ சொல்லி அமீரின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தற்போது சின்னத்திரையில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். 


அதுமட்டுமல்லாது சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். 

இவ்வாறான நிலையில் அமீர் பகிந்த பிறந்த நாள் வாழ்த்தில், 'என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி, அடுத்த வருடம் நாங்கள் கைகளை ஒன்றாக  பிடித்துக்கொண்டு உங்கள் இதயம் விரும்பும் இடத்திற்குச் செல்வோம். ஒவ்வொரு காலை விடியும் போதும்  நான் உன்னை மேலும் மேலும் நேசிக்கிறேன். என் இரும்புப் பெண்மணிக்கு இன்னும் பல மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.



Advertisement

Advertisement