• Dec 25 2024

தனது மார்க்கெட்டை இழந்தாரா சூர்யா? கிடப்பில் போடப்பட்ட 600 கோடி கர்ணா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் சூர்யா. இவர் நேருக்கு நேர் என்ற படத்தில் ஆரம்பித்து தற்போது கங்குவா வரை பயணித்துள்ளார். இதில் எத்தனையோ வெற்றி படங்களும் தோல்விப் படங்களும் காணப்படுகின்றன. ஆனாலும் தற்போது வெளியான கங்குவா  படத்தின் அளவிற்கு எந்த ஒரு படமும் விமர்சனங்களை எதிர்கொள்ளவில்லை.

கோலிவுட் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்படுவது என்றால் அது சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா  திரைப்படம் தான். அதற்கு காரணம் இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னாடியே பட ப்ரமோஷன்களில் பப்ளிசிட்டி கொஞ்சம் ஓவராக பண்ணிவிட்டார்கள். மேலும் இந்த படம் 2000 கோடிகளை குவிக்கும் என்றெல்லாம் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார்.

படம் வெளியான பிறகு அவர்கள் பேசுனதுக்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்துச்சு. முதலில் அதிக சத்தத்துடன் படம் காணப்பட்டது. அதன் பின்பு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. மேலும் படத்தின் கதையும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக இல்லை என்று சொல்லப்படுகின்றது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

d_i_a

கங்குவா திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒன்பது நாட்களைக் கடந்த நிலையிலும் இந்த படம் மொத்தமாக 64 . 40 கோடி ரூபாய் தான் வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இதன் தயாரிப்பு நிறுவனம் இந்த படம் 150 கோடிகளை கடந்து பிளாக் பாஸ்டர் ஹிட் என குறிப்பிட்டுள்ளார்கள்.


இதைத்தொடர்ந்து சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு வரலாறு படமொன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  அந்தப் படத்தை பால் மில்கா பாக் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.  மேலும் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் அந்த படத்திற்கு கர்ணா என டைட்டில் வைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், கங்குவா படத்திற்கு விழுந்த பெரிய அடி அவருக்கு ஆப்பு வைத்துள்ளதாம். அதாவது சூர்யாவை நம்பி செலவு செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. இதனால் கர்ணா படம் கிடப்பில் போட இருப்பதாக கூறப்படுகின்றது. 

 கங்குவா  படத்தின் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கர்ணா படத்தை பாதித்துள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றிருந்தால் கர்ணா படம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறி சூர்யா கையில் எந்த படமும் இல்லாமல் தனது மார்க்கெட்டை இழந்து வருகின்றார் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement