• Dec 25 2024

நடிகை சமந்தாவின் மூத்த அண்ணனை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்.  

கடந்த  2010-ஆம் ஆண்டு வெளியான 'Ye Maaya Chesave' என்ற படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியது. 

இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். 


ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். 


இதை தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 


இந்நிலையில், தனது அண்ணன் உடன் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

நடிகை சமந்தாவிற்கு மொத்தம் இரண்டு அண்ணன்கள். இதில் மூத்த அண்ணன் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement