• Dec 26 2024

எங்க வீட்டு மகாலட்சுமியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாச்சு- சீரியல் நடிகை காயத்திரியின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை காயத்ரி இந்த நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி அதை தொடர்ந்து சில சீரியல்களில் நடிக்க தொடங்கினார். 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற சீரியலில் நிலா என்ற கேரக்டரில் அறிமுகமாகி தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.


தொடர்ந்து தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து மேடு, மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் அடுத்தடுத்து காயத்ரி பல கேரக்டரில் நடித்துக் கொண்டே இருந்தார். அதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.


நடன இயக்குநர் யுவராஜ் என்பவரைத் திருமணம் செய்திருக்கும் இவருக்கு தருண் என்கிற 12 வயதில் மகன் இருக்கிறார்.இதனை அடுத்து அண்மையில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இப்போது தன் குழந்தையுடன் வீட்டுக்கு சென்று விட்டார். இது குறித்து வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement