• Dec 28 2024

தங்கையுடனும் அவருக்கு கனெக்சன் இருக்கு... புதிய பூகம்பத்தை கிளப்பிய சுசித்ரா??

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

முன்னொரு காலத்தில் பிரபல பாடகியாக காணப்பட்ட பாடகி சுசித்ரா, தற்போது தமிழ் திரையுலகினரால் வெறுக்கத்தக்க ஒருவராக மாறி வருகின்றார். அதற்கு காரணம் அவர் பேசி வரும் சர்ச்சைக்குரிய விடயங்கள் தான்.

சுச்சி லீக்ஸ் என்ற விவகாரத்திற்கு பிறகு மீடியா பக்கமே தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார் சுசித்ரா. தனது கணவரையும் விவாகரத்து செய்து லண்டனில் செட்டில் ஆகி இருந்தாராம். அதற்கு பின் அவர் தொடர்பான எந்த ஒரு தகவல்களும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது அவர் youtube சேனலுக்கு அளித்து வரும் பேட்டிகள்  படு வைரலாகி வருகின்றது. அதில் தனது கணவரை மட்டும் இன்றி  நடிகர் தனுஷ், திரிஷா, அண்ட்ரியா, விஜய், அஜித், ஷாருக்கான் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களையும் பற்றி பேசியிருந்தார்.

ஆனாலும் இவர் வெளியிடும் தகவல்களுக்கு யாரும் நேரடியாக பதிலடி கொடுக்கவில்லை. நடிகை திரிஷாவும் மறைமுகமாகவே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அவரது கணவரும் தற்போது போலீஸ் சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.


இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு,  நான் இனி எந்த யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன். அவர்கள் கண்டபடி என்னுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி விமர்சிக்கின்றார்கள்.  இதனால் டிவி சேனல்களுக்கு மட்டுமே நான் இனி பேட்டி கொடுப்பேன் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சுசித்ரா கொடுத்த பேட்டியில் புதியதோர் பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தனது தங்கையுடன் உறவு வைத்திருந்தார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,


எனக்கு அம்மா, அப்பா இல்லை. தங்கை மட்டுமே இருந்தா. எனக்கும் கார்த்திக் குமாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விலகிய  நிலையில், ஒருநாள் வீட்டுக்கு வந்த தங்கை, கார்த்திக் குமாருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் செய்ததாக கூறினார். எனக்கு அப்போது அது புரியவில்லை. பின்பு இப்பவும் டச்சில் இருக்கிறாயா எனக் கேட்க, அதற்கு ஆமாம். அவர் என் கிளையன்ட் என்றார். இதனால் தங்கையுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement