• Dec 26 2024

விஜயகாந்த் இறப்பில் நடந்த நெகிழ்ச்சி.. அவர் ஒரு கடவுள்! சாந்தி வில்லியம்ஸ் பகிர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் விஜயகாந் நினைவிடத்திற்கு வருகை செய்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். அங்கு செல்லும் அனைவருக்கும் சாப்பாடும் கொடுத்து வருகிறார் பிரேமலதா.

இந்த நிலையில், தன்னைப் பொறுத்தவரையில் விஜயகாந்த் ஒரு அன்னதான பிரபு என்று நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

விஜயகாந்த் நிஜமாகவே ஒரு கடவுள். அவர் மட்டும் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ இருந்தால் உலக மக்களுக்கு நல்லது செய்திருப்பார். மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவரை அன்னபிரபு என்று சொல்லலாம் ஏன் கடவுளுக்கு சமம் என்று சொல்கிறேன்.


அதற்குக் காரணம் அவரது உடல் அடக்கம் செய்ய எடுத்துச்  செல்லும்போது கோயம்பேடு பாலம் அருகே இரண்டு கழுகுகள் மேலே வட்டமிட்டது. அப்போதுதான் இவர் கடவுள் என சொன்னேன். நான் விஜய் காந்துடன் கேப்டன் மற்றும் நரசிம்மா போன்ற படங்களில் நடித்துள்ளேன்.


அதில் நரசிம்மா பட சூட்டிங் டி.ராஜேந்திரன் கார்டனில் நடந்தது. எனக்கு அதில் இரண்டு நாட்கள் வேலை.  எனக்கான ஆடைகள் உள்ள அனைத்தையும் வாங்கித் தந்தார்கள். எலாம் முடிந்து நான் வீட்டுக்கு கிளம்பும் போது மேனேஜர் வந்து பெரிய கவர் ஒன்று என்னிடம் தந்தார். 20 ஆயிரம் தான் என்னுடைய சம்பளம் என சொல்லிவிட்டு இது எனக்கு வந்த கவர் இல்லை என்றேன். அவர் உங்களுக்கு தான் என தெரிவித்தார்.

ஆனாலும் அங்கு வந்த விஜயகாந்த் என்ன பிரச்சனை என என்னிடம் கேட்க, நான் பணம் அதிகமாக இருப்பதாக சொன்னேன். எடுத்துட்டு போங்க என்று கூறினார். அதற்கு காரணம் எனக்கு அப்போது தெரியவில்லை பின்னாலில் தான் தெரிந்தது. அதாவது வாய்ப்பு கேட்டு அலைந்த காலத்தில் ஜெமினி பாலம் அருகே உள்ள லாட்ஜில் தான் விஜயகாந்துக்கு வில்லியம்ஸ் நல்ல பழக்கம். இது அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். வில்லியம்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இருக்கார் என்பதை அறிந்து தான் அவர் எனக்கு அதிகமாக பணம் கொடுத்துள்ளார். இதனை நான் என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. விஜயகாந்தின் பெயரை அவரது குடும்பம் காப்பாற்ற வேண்டும். அவர் கடவுள் என்பதில் மறு பேச்சே கிடையாது என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement