• Dec 25 2024

சொல்லும் தைரியம் அவருக்கு உள்ளது! பகத் பாசில் பற்றி ஊர்வசி சொன்ன உண்மை!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஊர்வசி. பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அன்று தொடக்கம் இன்று வரை முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.


பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர்  சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி, பகத்பாசில் பற்றி கூறியுள்ளார்.


அதில் இன்று இருக்கும் நடிகர்கள், நட்சத்திர அந்தஸ்தை பெறவும். ஏராளமான ரசிகர்களை ஈர்க்கவுமே முயற்சிக்கிறார்கள். ஆனால், பகத்பாசில் மட்டும்தான் வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் அவர் தன்னை நடிகர் என்று மட்டுமே வரையறுக்க விரும்புகிறார். அதன்படி, அவர் மட்டுமே நடிகர் என்ற பாதையில் மாறாமலும் விலகாமலும் இருக்கிறார்.

d_i_a


இதனால், நடிகர் என்று சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் பஹத் பஷில் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று பான்  இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement