• Jun 11 2026

உடம்பு நல்லா இருக்குன்னு தான் சொன்னார்..! திடீரென்று என்ன ஆச்சு.! ராஜேஷ் மகளின் கதறல்..

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மனிதநேயம் நிரம்பிய நடிகராக, பல்வேறு திரைப்படங்களில் அப்பா, ஆசிரியர் மற்றும் மரியாதைமிக்க மனிதர் போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்து பிரசித்தி பெற்றவர் தான் ராஜேஷ். தமிழர்களின் மனதில் பதிந்திருந்த இவர், சமீபத்தில் காலமான செய்தி திரையுலகத்தை பாதித்திருந்தது.


இந்நிலையில், கனடாவில் வசித்து வரும் அவரது மகள் திவ்யா ராஜேஷ், தற்போது வெளியிட்டுள்ள ஒரு உணர்ச்சி மிகுந்த காணொளி தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தந்தையின் மறைவு குறித்த தன்னுடைய கவலையை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.


அந்த காணொளியில், “எனக்கு டிக்கெட் கிடைச்சிருச்சு கனடாவில இருந்து flight ஏறப்போறன். சனிக்கிழமை காலையில இந்தியா வந்துருவேன். நானும் அப்பாவும் daily காலையில பேசிப்போம். கடைசியா போனில கதைச்ச போது உடம்பு நல்லா இருக்கு என்று சொன்னார். திடீரென்று என்ன நடந்ததோ...கடைசியா, போன வருஷம் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது தான் இந்தியா வந்து அவரைப் பார்த்தேன்." என மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார். 


Advertisement

Advertisement