• Dec 26 2024

எனக்கு வழிகாட்டியாக இருந்தார்! ராமோஜிராவ் மறைவுக்கு சூப்பர்ஸ்டார் அஞ்சலி !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் பெரியளவில் சாதித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் மறைந்தபின்பு அவருக்கு பல சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். அவ்வாறே சமீபத்தில் ராமோஜி ராவுக்கு ரஜனிகாந்த் இரங்கல் பதிவு போட்டுள்ளார்.


இராமோஜி ராவ்  ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளரும், ஊடக தொழில்முனைவோருமாவார். உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு அரங்கமான இராமோஜி திரைப்பட நகர், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான உஷாகிரன் மூவிஸ், ஈடிவி என்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்ட இரமோஜி குழுமத்தின் தலைவராக உள்ளார்.


இவ்வாறு இருக்கும் இவர் காலமானதை தொடர்ந்து x தலத்தில் ரஜனி பதிவொன்றை போட்டுள்ளார். அதில் "எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் காருவின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என குறிப்பிடப்பட்டியுள்ளது.

Advertisement

Advertisement