• Dec 25 2024

விஜய் சேதுபதி ஒரு தனிமைத் தந்தை.. அன்பான மகளால் அம்பானி ஆனவர்: வைரமுத்து..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி ஒரு தனிமை தந்தை என்றும் அன்பான மகள் கிடைத்ததால் அவர் ஒரு அம்பானி என்றும் கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான திரைப்படம் ’மகாராஜா’ வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியாக விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் திடீரென அவருக்கு ஏற்படும் பிரச்சனை அந்த பிரச்சனைக்காக அவர் காவல் நிலையம் செல்வது, காவல் நிலையத்தில் அவர் அலைக்கழிக்கப்படுவது ஆகிய காட்சிகள் சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வீடியோ சமயத்தில் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடல் கொடுத்து கவிப்பேரரசு வைரமுத்து விஜய் சேதுபதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விஜய் சேதுபதி
ஒரு தனிமைத் தந்தை

உறவற்ற வெறுமை
மகளென்ற பந்தத்தால்
நிறைந்து வழிகிறது

முடிதிருத்தும்
தொழிலாளி அவர்

ஆனால், உலகத்தின்
பெரும்பணக்காரர்களுள்
தானும் ஒருவன் என்று
பெருமை பேசுகிறார்

எப்படி?

‘அன்பான மகள்வந்ததால்
அம்பானி நானாகிறேன்’

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில்
அஜனீஷ் லோக்நாத் இசையில்
சித் ஸ்ரீராம் குரலில்
மஹாராஜா படத்தின்
ஒரு தனிப்பாடல் இது

மூன்றுமுறை கேளுங்கள்
முழுச்சாரம் இறங்கும்

Advertisement

Advertisement