• Dec 26 2024

அவரு சொன்னால் சரியா தான் இருக்கும், அனன்யாவின் ரீஎன்ட்ரிக்கு பிரதீப் தான் காரணமா?- வெளியாகிய முக்கிய ஆதாரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் எலிமினேட் ஆகி ப்ராவோ வெளியேறியிருந்தார். இதனை அடுத்து இன்றைய தினம் அக்ஷயா தான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும் விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் இனி வரும் நாட்களில் நிகழ்ச்சி சுவாரஸியமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இது ஒரு புறம் இருக்க வனிதா விஜயகுமார் தன்னை பிரதீப்பின் ஆதரவாளர்கள் தாக்கி விட்டதாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். தற்பொழுது இந்த விடயம் தான் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த சூழலில் பிரதீப் தற்பொழுது பிக்பாஸிற்குள் நுழைந்திருக்கும் அனன்யாவுடன் பேசிய வட்சப் சட்டிங்கை வெளியிட்டுள்ளார். அதில் அனன்யா பிக்பாஸ் வீட்டில் பிரதீப்பை நரி என்று சொன்னதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். அதற்கு பிரதீப் ஆண்டனி அது பரவாயில்லை.உங்களுடன் நல்ல நட்பை ஏற்படுத்த முயன்றேன்.


ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அது முடியவில்லை என்று சொல்ல அனன்யா தான் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லவுள்ளதாகவும் கண்டிப்பாக இந்த முறை விளையாட்டை சூப்பராக விளையாப்போவதாகவும் சொல்கின்றார். அப்போது பிரதீப் நீங்கள் ஒரு ரகசிய அறையின் மூலம் தான் செல்ல வாய்ப்பு இருக்கு என்று சொல்கின்றார்.

அதற்கு அனன்யாவும் நீஙக சொல்லுறது உண்மை தான் நான் ரகசிய அறையின் ஊடாகத் தான் செல்லப் போகின்றேன், சூப்பராக கண்டு பிடித்து விட்டீர்களே என கூறியுள்ளார்.இந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement