• Dec 26 2024

குட் நைட் திரைப்பட மீதாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை இவர்தான்... வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தில் காதல் கதாபாத்திரத்தில் ஹீரோயினியாக நடித்து சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபல்யமானவர் நடிகை மீதா. இவர் சிறந்த திரைப்படமான குட் நைட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு  நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று குட் நைட். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்த்ததை விட வசூல் மாபெரும் சாதனைகளை படைத்தது. இப்படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்க விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார்.


இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை மீதா திருமணம் நிச்சையப்பட்டுள்ளது. முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மீதாவிற்கு குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.


இன்று நடிகை மீதாவிற்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் மீதா ரகுநாத் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.


Advertisement

Advertisement