• Jul 30 2026

பாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஷ்ரத்தா கபூர்.. வெளியான கவர்ச்சிப் புகைப்படங்கள் இதோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஷ்ரத்தா கபூர், தனது புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களால் மீண்டும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இயல்பான புன்னகை, எளிமையான தோற்றம் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவரது அழகையும், எளிமையையும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.


நடிகர் சக்தி கபூரின் மகளான ஷ்ரத்தா கபூர், 2010 ஆம் ஆண்டு வெளியான 'டீன் பட்டி' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிப்புடன் மட்டுமல்லாமல், பாடகியாகவும், பிராண்ட் தூதராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

நாட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகவும், சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபலமாகவும் ஷ்ரத்தா கபூர் திகழ்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. 

தற்போது வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படங்களும் அவரது ரசிகர்களை கவர்ந்ததுடன், இணையத்தில் டிரெண்டாகி பேசுபொருளாக மாறியுள்ளன.


Advertisement

Advertisement