• Sep 05 2025

கோட் லுக்கில் விஜய்... நடிகர் மஹத் எடுத்த செல்பி... வைரல் போட்டோ இதோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் கோட் படம் செம மாஸாக இன்று சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜமல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.


இதில் நடித்துள்ள பிரபலங்களை தாண்டி நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் படத்தில் உள்ளதாம். படத்தை சிவகார்த்திகேயன், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் முதல்நாள் முதல் காட்சி படம் பார்த்துள்ளனர். விஜய்யின் கோட் படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் இப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோ வெளியாகியுள்ளது.


இதுவரை நாம் விஜய்யை பார்த்திராத கெட்டப்பில் நடிகர் மஹத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் போட்டோ எடுத்துள்ளார். தற்போது அந்த போட்டோ வெளியாக ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில் நடிகர் விஜய் கோட்  படத்தில் வரும் அப்பா வேடத்தில் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்

  

Advertisement

Advertisement