• Apr 07 2026

வெற்றிமாறனின் 'அரசன்' படத்தில் இணைந்த நடிகர் கென்.. வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.!

shali / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில், திறமையான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் அரசன் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம், வலுவான கதையும், உணர்ச்சிகளும் கலந்த ஒரு படைப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.


இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமீர், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் கென் கருணாஸ் இணைந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தற்போது யூத் படத்தில் கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.


பல திறமையான நடிகர்கள் இணைந்துள்ள இந்த “அரசன்” திரைப்படம், வெளியாகும் முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement