விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகின்ற சீரியலே பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பல இல்லத்தரசிகளின் உள்ளங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடைபெற்ற டான்ஸ் காம்படீஷனில் இனியா கலந்து கொண்டு நடனமாடியிருந்தார் . இவரின் நடனத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் அவருடைய வீடியோவை பகிர்ந்து கடும் ட்ரோலுக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்து வரும் நேகாவின் தாயார் இது தொடர்பில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில் அவரது தாயார் கூறுகையில், தனது மகள் மிகவும் வருத்தமாக உள்ளார். என் பொண்ணு குழந்தையில இருந்தே நடிச்சிட்டு இருக்கா.. அவ இவ்வளவு காலத்தில இப்படி வருத்தப்பட்டு நான் பார்க்கவில்லை.
நீங்கள் எல்லாரும் என்னுடைய மகளை கலாய்த்து பேசுறீங்கள் உங்க எல்லாருக்கும் என் பொண்ணு தான் கதைக்கிறதுக்கு இருக்கிறாளா? என்றதுடன் கலாய்க்கிறது என்ற பேரில் என் மகளை கோவப்படுத்துகின்றீர்கள் என்று வருத்தமாக தெரிவித்துள்ளார்.
மேலும் நேகா அவ வாழ்க்கையில எவ்வளவோ பார்த்திருக்கா ஆனால் அது எதுவும் அவள இந்த அளவிற்கு காயப்படுத்தவில்லை ஆனால் தற்பொழுது வருகின்ற கமெண்ட்ஸை பாத்து ரொம்பவே கவலைப்படுகின்றாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!