• Dec 26 2024

1300 கோடி பட்ஜெட் உயர்த்திய பிரமாண்ட இயக்குனர்! SSMB29 மெகா கூட்டணி அப்டேட் இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலி இந்திய சினிமாவில் அதிகப் பொருட்செலவில் பிரமாண்டமாக படம் எடுப்பவர். அதனை ஹாலுவுட் படங்கள் மாதிரி விளம்பரப்படுத்தி, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வார். ஆயிரம் கோடி வசூலிக்க முடியும் என்பதை தனது பாகுபலி மற்றும் RRR ஆகிய படங்களின் மூலம் நிரூபித்து காட்டினார். 


அதன்படி, ராஜமெளலி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இந்திய சினிமாத்துறையினரும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து எப்போது பணியாற்றுவர் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இருவரும் ஊடகங்களில் வெளிப்படையாக அறிவித்தனர். 

d_i_a


இந்நிலையில் SSMB29 படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் என ராஜமெளலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார். வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் மகேஷ்பாபு  இப்படத்திற்காக வித்தியாசமாக ஹேர் ஸ்டைல் வளர்த்து வருகிறார். இப்படத்துக்கு கருடா என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. 


இந்த படத்திற்கு ராஜமெளலி ஒரு படி மேலே போய் ரூ.1,300 கோடி பஜ்ஜ்ட்டில் உருவாக்க இருக்கிறார்.  இதைக்கேட்டு மகேஷ்பாபு ரசிகர்கள் வானுக்கும் பூமிக்கும் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் ஆயிரம் கோடியில் உருவாகும் முதல் படம் என்பதால் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.இனி வரும் களங்களில் இது தொடர்பான அப்டேட் செய்திகள் வெளியாகும். 


Advertisement

Advertisement