நடிகர் தாடி பாலாஜி த. வெ.க கட்சியில் இணையப் போவதாக எழுந்த சர்ச்சை பற்றி நேர்காணல் ஒன்றில் கொடுத்த கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது.
குறித்த நேர்காணலில் பாலாஜி கருத்து தெரிவிக்கையில் , தான் விஜய்க்கு ஒரு நண்பரா தான் வேலை செய்து கொண்டிருக்கின்றேனே தவிர எந்தவிதமான பதவி எதிர்பார்த்தோ இல்லை எனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றோ நான் வேலைசெய்யவில்லை என்றார். மேலும் தான் என்ன நோக்கத்தில் வேலை செய்கின்றேன் என்பது மரியாதைக்குரிய த.வெ.க தலைவர் விஜய்க்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் விஜய் யாருடைய கதைகளையும் கேட்பதில்லை தானாக தான் முடிவெடுப்பார் என்றதுடன் தான் நெஞ்சில் விஜய் சாரின் போட்டோவை பச்சை குத்தினது த.வெ.க கட்சியில் அவர் பதவி தருவார் என்பதற்காக இல்லை என்றார் பாலாஜி.
என்னை பற்றி யார் என்ன கதைத்தலும் எனக்கு எல்லாரையும் மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் தனக்கு விஜய் நிறைய உதவி செய்துள்ளார் அதற்கு நன்றிக்கடனாகவே தான் அந்தக் கட்சியில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜயின் கட்சியில் தொண்டனாக வேலை செய்வதற்கு எனக்கு விருப்பமாக உள்ளதாக கூறியதுடன் அதனை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
Listen News!