• Feb 25 2025

ரசிகையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய அஜித்! - வெளியான தகவல் இதோ!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் தற்பொழுது செய்த செயலால் மீண்டும் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்துள்ளார். அதாவது , ரசிகர்களில் ஒருவர் தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு அஜித் வாழ்த்து சொல்ல வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு அஜித் உடனே மறுப்பு தெரிவிக்காமல் அக் குழந்தையை பாராட்டி வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

அத்துடன் அஜித் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் நடிகராக காணப்படுகின்றார். அவரது ரசிகர்கள் எப்போதும் அவரை தங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதுவார்கள். அந்த வகையில், ரசிகை ஒருவர் தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு அஜித்திடம் நேரடியாகச் சென்று அவரிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்று கேக்கும்  கட் பண்ணியுள்ளார்.


அதன் போது அஜித், அந்தக் குழந்தை “நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் வளர வாழ்த்துகள்” என்று வாழ்த்து தெரிவித்தது அவர்களின் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அஜித் சினிமாவில் மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் எளிமையாக மற்றும் உண்மை உணர்வுகளுடன் நடந்து வருவதைப் பார்த்து ரசிகர்கள் சந்தோசத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement