• Dec 25 2024

ஸ்டார் திரைப்படத்தில் நடிகர் கவின்... வெளியான போட்டோ ஆல்பம் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் இளன் பியார் பிரேம காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆனார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் தான் "ஸ்டார்".


இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். அதற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் கூட வெளிவந்தது. ஆனால், அதன்பின் சில காரணங்களால் அப்படத்தை கைவிட்டனர். அதன் பிறகு நடிகர் கவினை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இளன்.


இப்படத்தில் கவினுடன் இணைந்து லால், ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் போட்டோ ஆல்பம் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். 


மேலும் ஸ்டார் படத்தின் முதல் பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளியிட போவதாகவும் அறிவித்துள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ ஆல்பம் வீடியோவும் வாய்ஸ் ஓவரில் படங்களுடன் அழகாக வீடியோவாக்கப்பட்டுள்ளது. 

இதோ அந்த போட்டோ ஆல்பம் வீடியோ..

Advertisement

Advertisement