• Apr 23 2025

கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் மாஸ் ஹீரோ..! வெளியான சூப்பர் அப்டேட் இதோ..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் புதிய யோசனைகளோடும், வித்தியாசமான படைப்புகளோடும்  ரசிகர்களை திருப்திப்படுத்திய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது அடுத்த முயற்சிக்கு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் சூர்யா நடிக்கும் “ரெட்ரோ” திரைப்படத்தில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவரது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது நடிகர் சிவகார்த்திகேயன் எனத் தகவல்கள் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றன.



இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், பீட்சா , ஜிகர்தண்டா , பேட்ட மற்றும் மஹான் போன்ற வெற்றிப் படங்களுடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது படங்களில் காணப்படும் சிறப்பான கதையம்சங்கள் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராக மாறவைத்துள்ளது. அந்தவகையில், இந்த புதிய முயற்சி அனைத்து ரசிகர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் சிவகார்த்திகேயன் இப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement