• Oct 26 2024

பீர் அடிப்பிங்களா அத்தான்? சத்தமின்றி வெளியான மெய்யழகன் படத்தின் டீசர் இதோ..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் கார்த்தி. இவர் இறுதியாக நடித்த ஜப்பான் படத்திற்கு பிறகு வா வாத்தியார், மெய்யழகன் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார். அத்துடன் சர்தார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் கார்த்தி.

மேலும் சில ஒரு தினங்களுக்கு முன்பு தான் மெய்யழகன் படத்தின் ஷூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடைந்தது. அதன் பின்பு இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மெய்யழகன் திரைப்படத்தின் டீசர் இன்றைய தினம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகி உள்ளது. அத்துடன் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்கள்  படக்குழுவினர்.


குறித்த படத்தில் கார்த்தியுடன் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரிக்க 96 படத்தின் இயக்குனரான பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதற்கு கோவில் வசந்தா இசை அமைத்துள்ளார். இதோ படத்தின் டீசர்...


Advertisement