தெலுங்கு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த விஜய் தேவரகொண்டா காதல் திரைப்படமான "நுவ்விலா" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கீதா கோவிந்தம் , அர்ஜுன் ரெட்டி மற்றும் நடிகையர் திலகம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபகாலமாக கெளதம் தின்னனுரி இயக்கத்தில் உருவான " kingdom " என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வந்துள்ளார். மேலும் அந்தப் படத்தினை இந்த வருடம் மே மாதம் திரையரங்கிற்கு வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது. அதனை அறிந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அனைவரும் படத்தினை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் தற்பொழுது ஒரு போட்டோவை படக்குழு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.
அதில் kingdom படத்தின் டீசரையே படக்குழு திடீரென வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்த டீசரை தமிழ் , ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்துள்ளனர். அந்தவகையில், சூர்யா ,ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் அம்மொழிகளுக்கு குரல் கொடுத்துள்ளனர். இந்த டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தை பார்க்கின்ற ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது என்றே கூறுக்கின்றனர்.
Listen News!