தமிழ் சினிமா உலகில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்த படம் தான் "டெஸ்ட்". நயன்தாரா நடிப்பில் வெளியாகிய இப்படம், ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. எனினும் படம் வெளியாகிய சில நாட்களிலேயே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், பிரபல நடிகரும் நாடக கலைஞருமான எஸ்.வி சேகர், "டெஸ்ட்" படம் ஓடாததற்கான உண்மையான காரணங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். எஸ்.வி சேகர் கூறியதாவது, "ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அந்தப் படத்தில் இருக்கும் விடயங்கள் ரசிகர்களை ஈர்க்கக் கூடியவையாக இருக்க வேண்டும். நல்ல கதைக்களம், மனதை நெகிழ வைக்கும் நடிப்புத்திறன் ஆகியவை இணைந்தால் தான் ஒரு படம் நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடும்." என்றார்.
அவர் மேலும், "ஒரு படம் ஓடவில்லை என்றால், அந்தக் குறையை சும்மா ஒரு காரணத்துக்காக சுட்டிக்காட்ட முடியாது. படம் மீது இருக்க வேண்டிய ஈர்ப்பு இல்லை என்றால் தான் மக்கள் அதனைப் பார்க்கமாட்டார்கள். அத்துடன் என்னை ஒரு படத்தில் இருந்து விலக்கினாலோ அல்லது நானா விலகினாலோ அந்தப் படம் தியாட்டருக்கு வராது அப்புடியே வந்தாலும் வசூலினைப் பெறாது"எனத் தெரிவித்திருந்தார்.
Listen News!