• Dec 27 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த கொடூரம்... போட்டியாளர் மீது ரசிகர்கள் அதிரடி தாக்குதல்... வைரல் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் தான். ஆனால், அதை சில ரசிகர்கள் மிகவும் பெர்சனலாக எடுத்துக்கொண்ட தவறான முறையில் ஈடுபடுகிறார்கள்.


பிக் பாஸ் தெலுங்கு பைனல் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல்லவி பிரஷாந்த் என்பவர் தான் டைட்டில் வென்றார். அதன் பிறகு நேரிலேயே ஒரு போட்டியாளருக்கு ரசிகர்களால் அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


அமர்தீப் மற்றும் பல்லவி பிரஷாந்த் இருவர் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரஷாந்த் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், வெற்றிபெற்ற பல்லவி பிரஷாந்தின் தின் ரசிகர்கள் பலரும், கூட்டமாக திரண்டு அமர்தீப் காரை தாக்கியுள்ளனர். 


அவர் சென்றுகொண்டு இருந்த காரை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள் பலரும், காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். ஒரு விளையாட்டு நிகழ்ச்சி எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ.. 


Advertisement

Advertisement