• Dec 25 2024

இரவில் இளம் பெண்ணுடன் நடிகர் விஷால் ஓட்டம்... கேமராவை கண்டதும் பயந்து ஓடிய நடிகர் விஷால்... வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால்.  தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா பயணத்தைஆரம்பித்தவர். 


விஷால் பிலிம் பேக்டரி என்று அவருக்கு என்று ஒரு நிறுவனமும் உள்ளது .அதன் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார் .ஹீரோவாக களமிறங்கியவர் ஆரம்பத்தில் சண்டக்கோழி, செல்லமே என சூப்பர் படங்களாக நடித்து வந்தார் பின் ஆக்ஷன் ஹீரோ போன்ற கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர் கடைசியாக மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.


நடிப்பதை தாண்டி பொது விஷயங்களில் தனது ஈடுபாட்டை அதிகம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஷாலின் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் விஷால் வலம் வந்துள்ளார்.


அப்போது அவரை சிலர் வீடியோ எடுத்துள்ளனர் .எடுத்தவர்கள் விஷால் என்று கூப்பிடும் போது திரும்பிய விஷால் வீடியோ எடுப்பதை கண்டதும் தனது முகத்தை மூடி கொண்டு அந்த பெண்ணையும் இழுத்து கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ...

 

Advertisement

Advertisement