தளபதி விஜயின் TVK மாநாடு கடந்த 27ம் திகதி மிக பிரமாண்டமாக விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்றது. தொண்டர்கள் ரசிகர்கள் என லட்சக்கணக்கில் மக்கள் வருகை தந்திருந்தனர். தளபதியின் இந்த மாநாட்டில் பேச வேண்டிய பாயிண்டுகளை பேசி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி இருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை ஆரம்பித்த விஜய் அதன் பின்பு அதன் கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். எனினும் இந்த கட்சி தொடர்பிலான கொள்கைகள் செயற்பாடுகள் என்ன என்பது பற்றி அப்டேட் கொடுக்காமல் இருந்தார். இதனால் பல விமர்சனங்களும் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக மிக சிறப்பாக மாநாட்டினை செய்து முடித்தார்.
இந்நிலையில் அந்த நிகழ்வில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கவிபாரதி துர்க்கா பணியாற்றி இருந்தார். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் அதுவும் தளபதி விஜய் முதல் மானில மாநாட்டில் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது எண்ணி நெகிழ்ந்த கவிபாரதி துர்க்கா தனக்கு வாய்ப்பு தந்தமைக்காக tvk தலைவருக்கும் தொண்டர்களுக்கும் ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ
விஜய் தன்னுடைய முதல் பிரம்மாண்ட மாநாட்டை தொகுத்து வழங்க தன்னுடைய ரசிகையையே தொகுப்பாளி ஆக்கியது பலருக்கு எரிச்சலையும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை காணமுடிகிறது.
— Raja Shanmugasundaram (@SRajaJourno) October 28, 2024
தங்களை அழைக்காமல் ஏதோ ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டாரே என்ற ஆதங்கம்தான் அது.
இப்படிதான் நிகழ்ச்சியை தொகுக்க… pic.twitter.com/oSsQfCD32v
Listen News!