தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவாகிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படத்தின் ஒளி, ஒலி மற்றும் காட்சிகள் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், படம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டும் காணப்படுகின்றது. அத்துடன் மீளுருவாக்கப்பட்ட ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதில் திரைப்படத்தின் முக்கியமான தருணங்கள் நவீன ஒளிப்பதிவு மற்றும் கிராஃபிக்ஸ் பயன்பாட்டுடன் மெருகேற்றப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் சேரன் கூறியதாவது , ஆட்டோகிராப் எனக்கு மட்டும் இல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிக முக்கியமான திரைப்படம். நவீன தொழில்நுட்ப உதவியுடன், புதிதாக திரையரங்கில் ரசிகர்களை மகிழ்விக்க இதை மீண்டும் வெளியிடுகிறோம்.
‘ஆட்டோகிராப்’ திரைப்படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டிஜிட்டல் ரீ-மாஸ்டரிங் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் காலத்திற்கும் கடந்த கதாபாத்திரங்களை உருவாக்கிய சேரனின் ‘ஆட்டோகிராப்’, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என படக்குழு எதிர்பார்க்கின்றது.
Listen News!