• Dec 25 2024

தளபதியுடன் மீண்டும் இணையும் மிரட்டல் வில்லன்... தளபதி 69 அப்டேட் இதோ...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தளபதி 69வது திரைப்படத்தில் விஜய் - ஹெச். வினோத் இருவரும் முதல் முறையாக இப்படத்திற்காக இணைகின்றனர். மேலும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில் அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 


கத்தி, பீஸ்ட், மாஸ்டர், லியோ படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக விஜய்யுடன் கைகோர்த்துள்ளார் அனிருத். கண்டிப்பாக பாடல்களும், பின்னணி இசையும் மாஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படத்தில் மமிதா பைஜூ, சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது. அதே போல் சமீபத்தில் வெளிவந்த தகவலில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி என கூறினார்கள். 


அதே போல் படத்தின் வில்லன் குறித்தும் சமீபத்தில் தகவல் வெளிவந்தது. பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் பாபி தியோல் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்கின்றனர். ஆனால், கதாநாயகி மற்றும் வில்லன் குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. 



Advertisement

Advertisement