• Apr 24 2026

25 நாட்கள் வெற்றியை கொண்டாடும் "சிறை" படக்குழு.! வைரலான போஸ்டர் இதோ.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைக்களம் கொண்ட படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனம் பெறும் நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ திரைப்படம், வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம், வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்துள்ளது.


இந்நிலையில், படம் 25 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில், படக்குழு தற்பொழுது சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பண்டிகை கால வெளியீடு என்பதால் குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் ‘சிறை’ படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்தனர்.

வெளியான முதல் வாரத்திலேயே படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததுடன், தொடர்ந்து பல வாரங்களாக காட்சிகள் நிலைத்திருப்பது, படத்தின் வெற்றியை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement