"விடாமுயற்சி" படம் ரிலீஸ் ஆகாததால் அந்த இடத்தை நிரப்ப பல சின்ன படங்கள் தியேட்டர்களில் வெளியானது. இதில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியிருந்த "தருணம்" என்ற படம் வெற்றிகரமாக வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவில் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் "தருணம்" படத்தின் காட்சிகள் சில இடங்களில் ரத்து செய்யப்படுவதாகவும் இதனால் திரையரங்குகளில் காட்சிகள் குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக படக்குழு தற்போது "தருணம்" படத்தை ரிலீஸ் நிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வெளியிட்ட நிறுவனம் "எதிர்பார்த்த வசூல் அம்சங்கள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளால் படத்தை ரிலீஸ் நிறுத்தி மீண்டும் புதிய நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்துள்ளது.மற்றும் இது குறித்து படத்தின் கதாநாயகனும் மிகவும் கவலையுடன் ஒரு பதிவினையும் போட்டுள்ளார்.
A heartfelt update on #Tharunam
Thanks to everyone who watched and are watching the movie ❤️ pic.twitter.com/eyk8ogdq1o
Listen News!