• Jan 07 2025

இந்தாண்டில் தனி இடம் பிடிக்கும் படங்களோடு களமிறங்குகிறார் ஹீரோ சூரி! கொளுத்துங்கடா வெடிய..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

2009 ஆம் ஆண்டில் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார் நடிகர் சூரி. தொடர்ந்து புது முக நடிகர்களுடனான படங்களில் நகைச்சுவை காட்சிகளில் தோன்றி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு பிடித்தார் சூரி.

இன்று தமிழ் சினிமாவின் இளவரசன் என உவமிக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால திரைப்படங்களில் நகைச்சுவை பார்ட்னராக இருந்து இருவருமாகவே வளர்ந்தனர் என்று சொன்னால் பொய்யில்லை.சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் ஒரு சிறு காட்சிக்காக சிஸ்க் பேக் லுக்குடன் தோன்றினார் சூரி. இது சினிமாவில் அவரின் ஈடுபாட்டை  வெளிப்படுத்தியது என்றே கூறலாம்.


இவ்வாறு இருக்கையில் கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை (பகுதி 1) திரைப்படத்தின் ஊடக பரோட்டா சூரி ஹீரோ சூரியாக தன்னை உருவமைத்து கொண்டார். விடுதலை படத்தின் வெளியீட்டின் பின் சூரியின் இன்னொரு முகம் திரைத்துறையினருக்கு தெரிந்தது என்றே சொல்லலாம்.

இவ்வாறு இருக்கும் போது நாயகன் சூரியை வாய்ப்புகள் வந்து சேர நாயகனாக தமிழ் சினிமாவில் களமிறங்கினர் நடிகர் சூரி.அந்த வகையில் ஹீரோ சூரியின் ஆண்டெனவே நாம் இந்த வருடத்தை குறிப்பிடலாம்.இந்த மாதத்தின் இறுதியில் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் கருடன் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் விடுதலை (பகுதி 2), ஏழுகடல் ஏழுமலை,மற்றும் கொட்டுகாளி படங்கள் வரிசை கட்டி வெளியீட்டிற்கு காத்து நிற்பதை நாம் கவனிக்கலாம்.

Advertisement

Advertisement