• Dec 25 2024

எப்படி நடிகையானேன்? நெகிழ்ச்சியில் உருகிய ராஷ்மிகா

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயாகி ஆன தருணம் குறித்து தனது இன்ஸ்டாவில் சில புகைப்படங்களுடன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


இந்தியாவின் நேஷ்னல் கிரஸ் என நடிகை ராஷ்மிகாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.  தான் நடித்த படங்களின் வெற்றியால் நடிகை ராஷ்மிகா உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாவில்  போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 


அந்த பதிவில் "முன்னைய காலங்களில் நான் பிரபல மாடல்களையும், நடிகர் நடிகைகளை பார்த்து ஆச்சரியப்பட்டிருந்தேன். நானும் இப்போது அந்த நிலைமையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி. இதில் முக்கியமானது நான் அதை அடைய கடினமாக உழைத்தேன்.


மேலும் நம்மை வித்தியாசமாக காட்டும் நபர்களுடன் வேலை செய்ய வேண்டும். நிச்சயமாக இதில் எடிட்டிங்கும் பங்கு இருக்கிறது. காமிராவுக்கு பின்புறம் திறமையான ஆட்கள் வேலை செய்கிறார்கள்"  எனப் பதிவிட்டுள்ளார். மேலும் கருப்பு நிற ஆடையில் இருக்கும் மாடலான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 


Advertisement

Advertisement