• Dec 26 2024

சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கு.. படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரௌத்திரம், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.


இன்று உலகளவில் வெளிவந்துள்ள இப்படத்தின் பிரீமியர் ஷோ நேற்று நடந்துள்ளது. இதில் படம் பார்த்த திரையுலகை சேர்ந்த ட்ராக்கர்ஸ் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர் விமர்சனம் குறித்து பார்க்கலாம் வாங்க.


"ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு சூப்பர். காமெடியில் கலக்கியிருக்கிறார் சத்யராஜ். ஒரு பாரில் சத்யராஜ் பண்ணும் அமர்களம் செம. அந்த காட்சிக்காகவே பல முறை படம் பார்க்கலாம்". "முதல் பாதி நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. இரண்டாம் பாதி முழுக்க எமோஷனல். முதல் பாதியில் போரின் சீன் எதுவுமே இல்லை. குடும்ப ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும்".


மேலும் விமர்சனம் தெரிவித்த அனைவரும் இப்படத்தின் இடைவேளை காட்சியில் வரும் நகைச்சுவை வேற லெவல் என குறிப்பிட்டுள்ளனர். படத்தின் மிகவும் பிளஸ் பாயிண்டாக இதுவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement