• Dec 25 2024

கங்குவா திரைப்படத்தின் OTT விற்பனை எத்தனை கோடி தெரியுமா..? முழு விவரம் உள்ளே

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பெரும் பொருட்செலவில் உருவாகி, கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்தில், சூர்யா திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதன் காரணமாக, வசூலில் முன்னேற்றம் குறைவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படவில்லை என திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.


அந்தவகையில், கங்குவா திரைப்படத்தின் OTT உரிமை எவ்வளவு விலைக்கு விற்பனையாகி உள்ளது என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய தகவலின் அடிப்படையில், கங்குவா திரைப்படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ ரூ. 100 கோடிமதிப்பிற்கு வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement