• Sep 11 2025

க்ளீன் லவ் ஸ்டோரியில் களமிறங்கும் அஜித் பட வில்லன்.! புதிய அப்டேட் இதோ

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு வெளியான  பெருமான் படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதன் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில்  அன்பு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதில் இவரது  கேரக்டர், குரல், ஆக்சன் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்தது. அதன் பின்பு மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களிலும் நடித்தார். 

இதைத் தொடர்ந்து போர், அநீதி , ரசாவதி போன்ற வித்தியாசமான கதைக்களங்களிலும் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அதில் அவருடைய ஆட்டம், பாட்டம், ஆக்சன், நடிப்பு, காமெடி என்பன  தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரையை பதிக்க காரணமாக அமைந்தது. 


தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்துள்ள அர்ஜுன் தாஸ் நடிப்பில் செப்டம்பர் 12-ஆம் தேதி பாம் என்ற  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக காமெடியில் கலக்க உள்ளாராம்.  முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்த படத்தின் மூலம் தன்னை ஒரு கமர்சியல் ஹீரோவாகவும் அடையாளப்படுத்த உள்ளார் அர்ஜுன் தாஸ்.

இந்த நிலையில், அர்ஜுன் தாஸின் அடுத்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஒன்ஸ் மோர் (ONCE MORE) என்ற  க்ளீன் லவ் ஸ்டோரியை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்  பெண்களைப் புண்படுத்தும் டாஸ்சிக் காதல் கதைகளில் நடிக்க மாட்டேன் என்றும் அர்ஜுன் தாஸ் கூறியுள்ளாராம். எனவே  சுத்தமான காதலை கொண்டாடும் கதை தான் அர்ஜுன் தாஸின் அடுத்த  இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement