இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘காந்தா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘காந்தா’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான லோகா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வியாபார ரீதியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது, திரையரங்குகளில் அதிக ஷோஸ் பெற்று வரும் சூழ்நிலையில் ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியாபார ரீதியான விஷயங்களை கருத்தில் கொண்டு, ‘காந்தா’ படத்தின் வெளியீட்டை சிறிது காலத்திற்கு பின்னோக்கி தள்ளுகிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளனர். துல்கர் சல்மான் ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்க, இவ்வாறு தற்காலிக மாற்றம் ஏற்பட்டிருப்பது சிறிய ஏமாற்றமளிக்கலாம். ஆனால் படத்தின் தரம் மற்றும் விரிவான வெளியீட்டுக்கான திட்டங்களை முன்னிட்டு, இது சிறந்த முடிவாகும் எனக் கூறப்படுகிறது.
Listen News!