• Dec 26 2024

"HUKUM டைகர் கா HUKUM" லண்டனை அலறவிட்ட அனிருத்!வைரலாகும் கான்செர்ட் மேக்கிங் வீடியோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா தொடங்கி மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழி சினிமாக்களிலும் , பல ஆல்பம் சாங்களிலும் தனது இசைத்திறமையை காட்டி வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ஆவார். பல படங்களில் இசையமைத்த இவர் சமீபத்தில் லண்டனிலில் ஒரு கான்செர்ட் ஒன்றை நடத்தியுள்ளார்.


ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மூணு திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் அனிருத். முதல் படத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்தே ரஜினி , விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த இவர் ஜவான் திரைப்படத்தின் பின் இந்திய அளவில் பேசப்பட்டு வந்தார்.


இவ்வாறு மிகவும் பிஸியாக இருந்த இவர் சமீபத்தில் திரைப்படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை சந்தோசப்படுத்த ஒவ்வொரு நாடாக சென்று மியூசிக் கான்செர்ட் நடத்தி வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் இவர் லண்டனில் கலந்து கொண்ட கான்செர்ட் காண செட் எவ்வாறு போடப்பட்டது என்பதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement