• Dec 28 2024

அவன்கிட்ட லவ் சொல்ல போறேன்! அப்பாவிடம் ஆசிர்வாதம் கேட்ட சவுந்தர்யா!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் விஷ்ணு பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். போட்டியாளர்களுக்கு இவர் ஒரு பக்கம் அட்வைஸ்சொல்லி கொண்டிருக்க மற்ற பக்கம் சவுந்தர்யா கேமரா முன் தன் அப்பா அம்மாவிடம் விஷ்ணுவுக்கு காதல் சொல்ல போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி சில சுவாரஷ்யமான விடயங்கள் நடைபெற்றுள்ளது.


ஜாக்குலின் விஷ்ணுவை கார்டின் ஏரியாவுக்கு அழைத்து சென்று "நான் எப்படி விளையாடுகிறேன் ஓகேயா இருக்கா" என்று கேட்கிறார். அதற்கு விஷ்ணு "லாஸ்ட் வீக்ல நல்ல பாண்ட் சொல்லி பேசுன நானே ஆச்சரியப்பட்டேன். நல்லா விளையாடு விட்டுக்கொடுக்க கூடாது அதுக்கு இங்க வரல சோ நல்ல விளையாடு நீ பண்றது நல்லா இருக்கு"  என்று சொல்கிறார். மேலும் விஷ்ணு ஜெப்ரியிடம் " நீ ஒரு நல்ல என்டடைனர் நல்லா பாடுற" , முத்துக்குமரன் "நல்ல கவுண்டர் சொல்வாரு விஜய் சேர்கிட்டயே அப்படி பேசுறது நல்லா இருக்கு அத பார்த்தே சிரிச்சி இருக்கோம்", "ராயன் கொஞ்சம் சிரிங்க" என்று போட்டியாளர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.  


வீட்டின் உள்ளே ஜெப்ரி மற்றும் சவுந்தர்யா கேமரா முன் வந்து நின்று " அப்பா விஷ்ணுவை எனக்கு புடிக்கும்னு நான் ஆல்ரெடி சொல்லியிருக்கேன் , இப்ப அவன் உள்ள வந்து இருக்கான். அவனும் லாஸ்ட் சீசன் பிக் பாஸ் வந்தான் நானும் இப்ப வந்து இருக்கேன். இது என்னோட காதல் சொல்ல நல்ல இடம் நல்ல சந்தர்ப்பம்னு நினைக்கிறேன் ஆசீர்வாதம் பண்ணுங்க" என்று சொல்கிறார்.

Advertisement

Advertisement