• Dec 25 2024

நான் ரிலேஷன்ஷிப்ல இருக்கன்.. வெட்கத்துடன் அருண் பிரசாத் சொன்ன சீக்ரெட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சக்கைப் போடு போட்ட சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் அருண் பிரசாத். அதில் மருத்துவராக இவர் நடித்திருந்தார். இந்த சீரியல் விமர்சனங்களை பெற்ற போதிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தில் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த பிறகு இவர் வேற எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். அதேபோல பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டும் இருந்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார் சீரியல் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் இதனை சரியாக பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக உண்மையை உடைத்துள்ளார் அருண் பிரசாத்.  ஆனாலும் அது யார் என்பதை தெரிவிக்கவில்லை. கூடிய விரைவில் தானே சொல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


அதன்படி தான் இப்பொழுது ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தன்னை அவர் தான் சரியான பாதையில் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சி நடக்கும்.. அதற்கு கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் அழைப்பேன்.. அவசியம் வரணும் என வெட்கத்துடன் தெரிவித்துள்ளார்..

இதேவேளை பிக் பாஸ் சீசன் 7 பங்கு பற்றி டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற அர்ச்சனாவும் அருண்பிரசாதும் காதலில் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளதோடு இவர்கள் டேட்டிங் சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement