• May 29 2026

“ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவன் நான் அல்ல” – மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் “தாவணிக் கனவுகள்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பார்த்திபன். அதன் பின் “புதிய பாதை” திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்தார். அந்த படத்திற்கு தேசிய விருதும், தமிழக அரசின் விருதும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து “சுகமான சுமைகள்”, “உள்ளே வெளியே”, “பொண்டாட்டி தேவை”, “குடைக்குள் மழை”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, “ஒத்த செருப்பு சைஸ் 7”, “கதை திரைக்கதை வசனம் இயக்கம்”, “இரவின் நிழல்” போன்ற பல படங்களை இயக்கி, ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மேலும், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த “நானும் ரவுடிதான்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தும் பாராட்டைப் பெற்றார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான “இட்லி கடை” படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இதனைத் தொடர்ந்து, பார்த்திபன் நடிப்பில் அடுத்து வெளியாக இருந்த தெலுங்கு திரைப்படம் தான் “உஸ்தாத் பகத் சிங்” . இந்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தனது சாதியைப் பற்றி பார்த்திபன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், என் திறமையை மட்டுமே நம்புவேனே தவிர  ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவன் நான் அல்ல. என் பேச்சால் வேதனைப்பட்ட அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை  மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அவருடைய பதிவு..

Advertisement

Advertisement