• Apr 24 2026

நீங்க இல்லாம நான் இல்லை..! பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி சொன்ன STR

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிம்பு நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவர்  வேஷ்டி-சட்டை அணிந்து வெளியிட்ட ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

சிம்புவின் கேரியரில் ஏற்பட்ட சர்ச்சைகள், உடல் எடை பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்திருந்தார். ஆனால் 'மாநாடு' படத்துடன் அவர் அதிரடியான கம்பேக் கொடுத்தார். 

அதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, தக் லைஃப் போன்ற படங்களில் புதிய STR-வை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது 'அரசன்' மூலம் அவர் மீண்டும் மாஸ் அவதாரத்தில் திரையில் கலக்கியிருக்கிறார்.


சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் ரத்த தானம் , அன்னதானம் போன்ற சமூக சேவைகளில் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில், நடிகர் சிம்பு நேற்றைய தினம் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் போட்டுள்ளார். 

 

Advertisement

Advertisement