• Dec 25 2024

I am Sorry வனிதா, கடும் கோபத்தில் முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட பிரதீப் ஆண்டனி- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை வனிதா ரிவ்யூ செய்யும் ஷோ ஒன்று தினமும் பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றது.அதில் தினசரி நடக்கும் நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசி வருகிறார் வனிதா. அந்த வகையில் இந்த சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம் தான்.


 அதனை வனிதா ரிவ்யூ செய்தபோது ரெட் கார்டு கொடுத்தது சரி தான் என பேசி இருந்தார். இதற்கு பிரதீப் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அது நடந்து 2, 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று நள்ளிரவு நடிகை வனிதா விஜயகுமாரை மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

 வனிதா பிரதீப்பின் ஆதரவாளர் தான் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரதீப் இதனை தெளிவுபடுத்தியே ஆகனும் என்று ஒரு பதிவினைப் போட்டுள்ளார்.அதில் எனக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் யாரும் எதிரிகள் இல்லை, நான் வனிதா கிட்ட ஏற்கனவே பேசியிருக்கிறேன். இந்த விஷயத்தை கேட்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.


என்னை மன்னிச்சிடுங்க, உடம்பை கவனமாகப் பார்த்துக்கோங்க ஜோவிகா ரொம்ப நல்ல பிளேயர், கண்டிப்பாக அவங்க ஜெயிப்பாங்க என்று சொல்லி இருக்கிறார். அத்தோடு வனிதாவும் பிரதீப் கிட்ட நல்ல விஷயமாக பேசி இருக்கிறாங்க இருப்பினும் இப்போது இப்படியொரு சம்பவம் நடந்தது பிரதீப்பிற்கே கடும் அதிர்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்துளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement