• Sep 17 2026

பணம் கிடைக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் செய்ய முடியாது… – நடிகை டாப்ஸி ஓபன்டாக்!

shali / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை டாப்ஸி பன்னு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது திரையுலகில் கவனம் பெற்று வருகின்றன. அதாவது, கதைகளை தேர்வு செய்வதில் தான் மிகவும் கவனமாக இருப்பதாகவும், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக வெளியாகி வரும் சில வகையான திரைப்படங்களை பார்க்கும்போது, அதுபோன்ற படங்களில் நடிப்பதை விட ஓய்வு பெற்றுவிடலாம் என்ற எண்ணம் தனக்கு தோன்றியதாகவும் டாப்ஸி கூறியுள்ளார். மேலும், நடிப்பின் மீது தனக்கு இன்னும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அதற்காக எந்தவொரு கதையிலும் கண்மூடித்தனமாக நடிக்க தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், ஒரு நடிகையாக தன்னுடைய படங்களை தேர்வு செய்வதில் தனக்கு சில கொள்கைகள் இருப்பதாகவும் டாப்ஸி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தனது பழைய திரைப்படங்களை திரும்பிப் பார்க்கும் போது, அவை தனக்கோ அல்லது தன்னுடன் பணியாற்றியவர்களுக்கோ தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தான் தெளிவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

டாப்ஸியின் இந்த வெளிப்படையான பேச்சு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement