• Dec 25 2024

எனக்கு மதமே வேண்டாம! உடம்பு போதும்! நடிகை ஷகீலா ஆவேசம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்துடன் இருந்த நடிகை ஷகிலா.தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒரு காலகட்டத்தில் பேமஸாக இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், இவருக்கு இருந்த கவர்ச்சி நடிகை அடையாளம் மாறி, அனைவருக்கும் பிடித்த அம்மாவாக மாறியுள்ளார்.


இந்த நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி, “சிறு வயதில் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். அதற்கு தகுந்தாற் போல என் உடல்வாகும் இருந்தது. ஆனால் என் தந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டு குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் தள்ளினார். பாலியல் கல்வி குறித்த படம் என என்னை அழைத்துச் சென்றவர்கள் தன்னை வேறுமாதிரியான படத்தில் நடிக்க வைத்தனர்.


வாழ்க்கையில் பசி துரத்த நான் எனக்கு வந்த அடுத்தடுத்த படங்களில் நடித்தேன். என் பசியை போக்கவோ, என் குடும்பத்தின் பசியை போக்கவோ என் மதம் உதவவில்லை. அதனால், நான் என் உடலை பயன்படுத்தி நடித்து சம்பாதித்து என் குடும்பத்திற்கு கொடுத்தேன்” இதை நினைத்து நான் ஒரு நாளும் சிறுமையடைந்ததில்லை. சொல்லப்போனால் பெருமை தான் படுகிறேன். 


இன்று வரை நான் புர்கா அணியவே இல்லை. என் பசியை போகாத மதம், எனக்கு விதிமுறைகளை கற்று கொடுக்க தேவை இல்லை. இங்கு எல்லாமே ஹரம் தான். இஸ்லாம் மதத்தில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவை கூடத்தான் ஹராம். அதை இங்கு பலரும் செய்துகொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி இருக்க என்னை யார் வந்து கேட்பார்கள் என்று கட்டமாக பதிலளித்திருந்தார். 


Advertisement

Advertisement