• Apr 08 2025

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை...! "பாக்கியலட்சுமி" நேகாவின் கருத்து!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட "பாக்கியலட்சுமி" சீரியலில் நடிக்கும் நேகா, தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். அதன்போது அவர் தனது சீரியல் அனுபவங்கள் மற்றும் அவற்றின் விமர்சனங்கள்குறித்துக் கூறியுள்ளார்.

நேகா பேசியபோது, "பாக்கியலட்சுமி" சீரியலில் நான் ஆடிய டான்ஸ் குறித்து பல விமர்சனங்கள் வந்ததுடன் சமூக ஊடகங்களில் பலரும் கலாய்த்தார்கள் என்றார். இதற்கு முதலில் இது எனக்கு கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. ஆனால், சில நேரங்களில் நாம் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று புரிந்துகொண்டேன்," என்று கூறினார்.


நடிகைகளாக இருக்கும் போது, சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களை சமாளிக்க வேண்டும் என்பது அவர்களின் பெரும் சவாலாகும். அந்தவகையில் நேகா இந்த விமர்சனங்களை ஒரு நேர்மறையான எண்ணத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நேகா கூறிய கருத்துக்கள் அவரது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கிறது. "என் திறமையை நிரூபிக்க நான் யாரிடமும் பொறுப்பு உடையவள்  அல்ல என்றதுடன் நான் முயற்சி செய்ய விரும்பும் விஷயங்களை செய்கிறேன் என்றார். அவை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக நான் எதையும் மாற்றிக் கொள்ள மாட்டேன்," என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement